Kavithai Corner

Love poem in tamil - Freeyavidu

யாரடீ நீ…

நான் நெருங்க நினைக்கையில் எல்லாம் விலகிச் செல்கிறாய்.. விலக நினைக்கையில் எல்லாம் நெருங்கி வருகிறாய்.. தவிப்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் நிற்க வைக்கிறாய்.. பரிவிற்கும் பிரிவிற்கும் இடையில் சிக்கவைக்கிறாய்.. தெளிவாக நினைக்கையில் குழம்பவைக்கிறாய்.. யாரடீ நீ... எனக்கு தோழியா? இல்லை எதிரியா ?
Kavithai_Love Poem

உனக்காகவே காத்திருக்கிறேன் !!!

அமைச்சர்களின் வருகைக்காக சாலையில் காத்திருக்கும் வாகன ஓட்டியைப் போல.. அவளின் வருகைக்காக நானும் காத்திருக்க.. கோடைக்கால மழைத்துளி போல.. ஒருசில நிமிடங்களே அவளின் இருப்பு கிடைத்தாலும்.. மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மறுவாழ்வு கிடைத்ததைப் போல மகிழ்கிறேன்...
Love in Bus - Kavithai Corner

காதல் மட்டும் புரிவதில்லை !!!

அடுத்த நிறுத்தத்திலாவது நெரிசல் குறையுமா என அனைவரும் எதிர்பார்க்கும் பேருந்தில்... அவளுக்கு நெருக்கத்தில் நின்று பயணிக்கையில்.. அம்மிக்கல்லுக்கு இடையில் சிக்கிய அரிசியாய் நான் நசுங்கினாலும்.. இறைவனுக்குப் படைத்த மலரைப் போல அவளை பாதுகாக்கையில் உணர்கிறேன்... அவள் மேல் எனக்கு உண்டான காதலை...
Freeyavidu - Tamil Kavithai Corner

கணக்கிலடங்கா என் கல்லூரி நினைவுகள்…

ஒவ்வொரு நாளும் நான் கல்லூரி நுழைவுவாயிலைக் கடக்கும் போதும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தர அவள் தவறுவதில்லை... திகட்டாத தித்திப்பாய் தினம் ஒன்றை எனக்குள் புகட்டி வாழ்க்கை வழிகாட்டியாய் மாறிவிட்டாள்... கல்லூரியில் நுழைவதற்கு முன் வெற்றுக் காதிதமாய் இருந்த என்னை சிற்பமாய் செதுக்கி அடையாளம் காட்டியவள்... யாரோவாக இருந்த என்னை தமிழாக எனக்கே அடையாளம்...
Freeyavidu - Kavithai Corner

நினைவுகளால் ஒரு கடிதம் !!!

சிலரைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கும்.. சிலரிடம் பேசினால் உற்சாகமாக இருக்கும்... ஆனால் உன் பெயரைக் கேட்டால் கூட உள்ளுக்குள் மின்னலடிக்கிறது.. உன்னை நான் காதலிக்கிறேனா எனத் தெரியவில்லை... ஆனால் உன்னுடன் இருக்க அதிகம் ஆசைகொள்கிறேன்.. நிஜத்தில் நிலவை விடத் தொலைவில் வசிப்பவளுக்கு... நினைவுகளால் ஒரு கடிதம்...
Freeyavidu - Tamil Kavithaigal

என் அருகில் நீ இருந்தால் !!!

என் அருகில் நீ இருந்தால்... எக்கச்சக்கமாய் ஏதேதோ தோன்றுமடி.. ஏழடி தூரம் தள்ளி நிற்க நினைத்தாலும்.. ஏனோ உன் விழி பார்க்கையில் எல்லாம்... எப்படியோ அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்... எப்படி தப்பிச் செல்வது எனத்தெரியாமல்... எத்தனையோ நாட்களாய் என் முயற்சியில் தோற்கிறேன்... என்னதான் தோற்றாலும் ஏனோ ஓயாமல் தொடர்கிறேன் உன்னை... ஏனென்றால் இது எனக்கு மாறாத கிறுகிறுப்பைத்...
FreeyaVidu -Kavithai Corner-Tamil Kathal Kavithai

நம் நினைவுகளுடன்…

நீ இல்லா இந்த இரவு நேரத்திலும்.. நாம் அமர்ந்த வீட்டுச்சுவர்.. நான் மறந்த நம் நேசக் கதையை காற்றில் கலந்து காதலுடனே என் காதில் கரையுதடி.. உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடிந்த காலத்தால்.. என்னிடமிருக்கும் உன் நினைவுகளைப் பிரிக்க சக்தியில்லை.. நம்மைப் பிரிக்க முயற்சி செய்யும் இக்காலமே ஓர் நாள் அயற்சி கொண்டு...
Tamil love poem girl

என்றும் அன்புடன்…

நிலவாக உன்னை என் வானில் வைத்து ரசித்தேன்... நிஜத்தில் அமாவாசையாகவும்.. நினைவுகளில் பௌர்ணமியாகவும் வாழ்கிறாய்... நான் விரும்புவது எதுவும் எனக்குக் கிடைக்காது என விதி இருக்க... நீ மட்டும் என்ன விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறாய்... எது வேண்டுமானாலும் நடக்கட்டும்.. எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை மாறட்டும்... எப்போதும் உன்மேல் நான் கொண்ட காதல்... எள் அளவும் மாறாது... என்றாவது உனக்கு ஒருவார்த்தை.. என்னிடம்...
Beautiful girl love poem

பிரமிக்க வைப்பவள் !!!

உன்னை என் பார்வையில் நான் தொலைத்துவிட விரும்பி உன்னை பார்க்கும் போதெல்லாம் நான் என்னையே தொலைத்துவிடுகிறேன்... இன்று நடந்த இதுவெல்லாம் என் கனவா என இன்னமும் எனக்கு குழப்பம் தீரவில்லை... உனக்கு நெருக்கத்தில் நான் இருக்கும் போது மட்டும் எனக்கே தெரியா என் திறனை சிறப்பாய் நான் வெளிபடுத்துவதாய் எனக்குள் ஓர்...
FreeyaVidu - Man searching love

தேடிப் பார்க்கிறேன் நான் தொலைத்த உன்னை..

நீ இல்லாமல் நான் என் பயணத்தை தொடர்ந்தபோது தான்... என்னைச் சூழ்ந்துள்ள சூழல்களை தெளிவாக உணர ஆரம்பித்தேன்... எனக்குள் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும் உன்னைத் தேடி என் பயணம் துவக்காமல் என் வழி நடக்கையில் நானும் முழுமை பெற்றதாய் உணர்கிறேன்... என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்காக பல வழிகளைச் சொன்னாலும்... நான் என் வழி நடப்பதையே பெருமையாய்...
Freeyavidu - Boy Love

என் தேவதையின் நினைவுகளுடன்…

ஆயிரம் முகங்கள் என்னைக் கடந்து சென்றாலும்-என் அழகு தேவதையின் முகம் பார்க்கும் ஒர் நொடி ஆயிரமாயிரம் மகிழ்ச்சியை என்னுள் தரும்... ஐந்தாயிரம் பேர் கூடியிருக்கும் அரங்கிலும் கூட ஐம்பதுமுறையேனும் அவளைத் தேடிப் பார்த்தது உண்டு... ஐந்தே நொடி அவளுடன் பேசினாலும்-அதை நினைத்தே ஐந்து நாட்கள் குதூகலித்ததுண்டு... அரை நொடி அவளைப் பார்த்தாலும் கூட-என் அனைத்து கவலைகளையும் மறந்து அந்த நொடிப்...
FreeyaVidu - Kavithai Corner

அவளும் நானும் !!!

அவள் ஒரு அழகான ஆபத்து எனத்தெரிந்தும்... அடிக்கடி அவளிடம் நான் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்... விலகிச் செல்ல நினைத்தாலும் நெருக்கத்தில் என்னைத் தொலைக்கிறேன்... அருகில் இருந்தாலும்... தொலைவில் நின்றாலும்... என் மனதிற்குத் தொல்லைகளை தந்துகொண்டேயிருக்கிறாள்... எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த உன் நினைவுகளை... எக்குத்தப்பாய் எவரோ தட்டி எழுப்பிவிட்டார்... எப்படி அதை நான் மீண்டும் தூங்கவைப்பேன்... என் நினைவுகள் முழுக்க நீயே வட்டமிட்டுக் கொண்டிருந்தால்...