அவளும் நானும் !!!

FreeyaVidu - Kavithai Corner

அவள் ஒரு அழகான ஆபத்து எனத்தெரிந்தும்…
அடிக்கடி அவளிடம் நான் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்…

விலகிச் செல்ல நினைத்தாலும்
நெருக்கத்தில் என்னைத் தொலைக்கிறேன்…

அருகில் இருந்தாலும்…
தொலைவில் நின்றாலும்…
என் மனதிற்குத் தொல்லைகளை தந்துகொண்டேயிருக்கிறாள்…

எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த உன் நினைவுகளை…
எக்குத்தப்பாய் எவரோ தட்டி எழுப்பிவிட்டார்…

எப்படி அதை நான் மீண்டும் தூங்கவைப்பேன்…
என் நினைவுகள் முழுக்க நீயே வட்டமிட்டுக் கொண்டிருந்தால்…