என் தேவதையின் நினைவுகளுடன்…

Freeyavidu - Boy Love

ஆயிரம் முகங்கள் என்னைக் கடந்து சென்றாலும்-என்
அழகு தேவதையின் முகம் பார்க்கும் ஒர் நொடி
ஆயிரமாயிரம் மகிழ்ச்சியை என்னுள் தரும்…

ஐந்தாயிரம் பேர் கூடியிருக்கும் அரங்கிலும் கூட
ஐம்பதுமுறையேனும் அவளைத் தேடிப் பார்த்தது உண்டு…
ஐந்தே நொடி அவளுடன் பேசினாலும்-அதை நினைத்தே
ஐந்து நாட்கள் குதூகலித்ததுண்டு…

அரை நொடி அவளைப் பார்த்தாலும் கூட-என்
அனைத்து கவலைகளையும் மறந்து
அந்த நொடிப் பொழுதைக் கொண்டாடியதுண்டு…
அவளைப் பார்க்கவேண்டுமென்ற அந்த ஒரு கணத்திற்காக அங்குமிங்குமாய்
அரைமணி நேரமாவது அலைந்ததும் உண்டு…

ஒருநாளில் குறைந்தது
ஒரு மணி நேரமாவது அவளை நினைத்தது உண்டு…

அவளுடனான என் நினைவுகள்
அனுதினமும் அவளுடன் உரையாடிய
அனுபவத்தை அளிக்கும்…

இருந்தும் அவளுடனான என் காதலை அவளுடன் நான் பகிர்ந்து கொள்ளும்முன்பே
இன்று என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள் என் தேவதை…

அவள் பிரிந்தாலும் என்னுள் இருக்கும்
அவள் மீதான காதலை யாராலும்
அழிக்க முடியாது
அது என்னுள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்….