தேடிப் பார்க்கிறேன் நான் தொலைத்த உன்னை..

FreeyaVidu - Man searching love

நீ இல்லாமல் நான் என் பயணத்தை தொடர்ந்தபோது தான்…
என்னைச் சூழ்ந்துள்ள சூழல்களை தெளிவாக உணர ஆரம்பித்தேன்…

எனக்குள் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும்
உன்னைத் தேடி என் பயணம் துவக்காமல்
என் வழி நடக்கையில் நானும் முழுமை பெற்றதாய் உணர்கிறேன்…

என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்காக பல வழிகளைச் சொன்னாலும்…
நான் என் வழி நடப்பதையே பெருமையாய் கருதுகிறேன்…

அது மற்றவர்கு முட்டாள்தனமான தோற்றத்தை தந்தாலும்
எனக்கு அதைப் பற்றிய கவலையில்லை…
காரணம் என் வாழ்க்கையை வாழப்போவது நான் தான்..
அதை எனக்கு பதில் அவர்கள் வாழபோவதில்லை என்பதால்…

இருந்தாலும் இந்த தெளிவிற்கு நீயும் ஒரு காரணமென்பதால்
உனக்கு என் நன்றியைச் சொல்ல நினைத்து
உன்னை தொலைத்த இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்…