பிரமிக்க வைப்பவள் !!!

Beautiful girl love poem

உன்னை என் பார்வையில் நான் தொலைத்துவிட விரும்பி
உன்னை பார்க்கும் போதெல்லாம் நான் என்னையே தொலைத்துவிடுகிறேன்…

இன்று நடந்த இதுவெல்லாம் என் கனவா என
இன்னமும் எனக்கு குழப்பம் தீரவில்லை…

உனக்கு நெருக்கத்தில் நான் இருக்கும் போது மட்டும் எனக்கே தெரியா
என் திறனை சிறப்பாய் நான் வெளிபடுத்துவதாய் எனக்குள் ஓர் மாயை…

முதல்முறை பார்த்த போதிலிருந்து இன்று வரை
நான் பெருமூச்சுவிடும் அளவு பிரமிக்கவைத்தவள் நீ…

உன்னுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை..
தூரத்திலிருந்தாலும் உன்னை கண்டு பிரமித்துக் கொண்டே இருந்தாலே போதும்..

#பிரமிக்க வைப்பவள்…