ரசிக்கத் தெரியாதவரையும் ரசிகனாய் மாற்றுபவள்..

Tamil Kavithai

விதைக்கும் கவி எழுத ஆசைவரும் அவள்
ண்களில் படும் போதெல்லாம்…

வாசத்திற்கும் புதுவாசம் வரும் அவள்
நேசத்தில் நெஞ்சம் நிறையும் போதெல்லாம்…

காலைப்பனிக்கும் குளிரெடுக்கும் அவள்
கரங்களைத் தீண்டையிலெல்லாம்…

பாதைக்கும் முடிய மனமின்றி நீண்டுகொண்டிருக்கும் அவள்
பாதங்கள் தரையை மிதிக்காமல் ஒட்டிச் செல்லும்போதெல்லாம்…

காலனிக்கும் காதல் வரும் அவள்
கால்களை உரசிக்கொண்டிருக்கும் போதெல்லாம்…

நிலவிற்கும் நிச்சயமாய் ஒரு நினைப்பிருக்கும்
நிதம் அவளுடன் இரவில் கதைக்கவேண்டுமென…

#ரசிக்கத் தெரியாதவரையும் ரசிகனாய் மாற்றுபவள்..