விசித்திரமான உறவு !!!

Girl playing with waves

நான் நெருங்க நினைக்கையிலெல்லாம்
நீ என்னை விலகிச்செல்கிறாய்…

நீ என்னை நெருங்கையிலெல்லாம்
நான் விலக நினைக்கிறேன்…

அதையும் கடந்து காலம் நம் இருவரையும்
சேர்க்க நினைத்தால்…

உனக்குள் ஆழமாய் செல்ல
எனக்கும் விருப்பமில்லை…

என்னுடனே இருக்க ஏனோ
உனக்கும் ஆசையில்லை…

இருந்தாலும் இந்த தொடர்விளையாட்டு
தினம் தினம் தொடர்கதையாகிறது…

#கடல் அலைகளுக்கும் கால்களுக்குமான விசித்திரமான உறவு…