லக்‌ஷ்மி என்கிற குறும்படம்

லக்‌ஷ்மி என்கிற குறும்படம் ஒன்று பற்றி எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதில் பலரும் குறிப்பாக சொல்லி நகைப்பது என்னவென்றால் பாரதியார் கவிதை சொன்னால் ஒரு பெண் மடங்கி அவனோடு போய்விடுவாளா என்பது தான்.

காவிரி பிரச்சனையில் இங்க பஸ் ஓடலைங்க எனும் போது அதுக்கு இன்ன இப்ப என்று கேட்பதோடு ,அம்மா வீட்டில் தங்கி வரேன் சொல்லும் போது..நீ வராவிட்டால் காலை உணவு என்னாவது என்று கேட்கிற கணவன் இருக்கும் இடத்தில் அவள் மறுக்க மறுக்க சுவையாய் சமைத்து போடுபவனை பெண்ணுக்கு பிடிக்காதா?

மனைவி முன்னாலேயே ஒரு பெண்ணோடு தொலைபேசிவிட்டு உனக்கு சொல்லத்தான் வேண்டுமா என்கிற படி எழுந்து செல்கிற ஆணாதிக்கம் இருக்கிற இடத்தில் அழகாய் அருகில் இருந்து இது இது பெண்ணுக்கானது என்கிற பாரதியார் கவிதையை ஒப்பிப்பவனை பெண்ணுக்கு பிடிக்காதா?

இரவில் உறவுக்கு மட்டும் தான் பெண் என்று கணவன் நினைத்திருக்க,ஒருவன் ஓவியம் வரையச்சொல்லி தூரிகையை கைகளில் கொடுத்தால் அவன் மேல் காதல் வராதா?

வழிச்சு இழுத்து ஜடை போட்டு இப்படித்தான் பெண் என்றால் இருக்கவேண்டும் என்கிற பிம்பத்தை ஒரு ஆணானவன் முடியை கலைத்து அழகாக்கி அணைத்து கண்ணாடிமுன்னால் நிறுத்தினால் அவன் மேல் காதல் வராதா?

லக்ஷ்மி ஏன் சோரம் போனாள் என்பதைதான் திரும்ப திரும்ப பேசும் இந்த சமுகம்… சேகரை பற்றி பேசுவதே இல்லை.